Skip to content

Policies · கொள்கைகள்

Sources and Data Availability

மூலங்களும் தரவுப் பகிர்வும்

Readers should be able to find the sources and data behind a published article, check them and build on them.

English

Sources and editions

Cite the edition of every text you quote – editor, publisher and year – and the verse, sūtra or page number, so that readers can find the passage. When readings differ between editions or manuscripts, say which one you follow.

Data availability statement

Articles based on fieldwork, interviews, surveys, recordings, text corpora or computational analysis include a short statement saying where the material can be found, or why it cannot be shared (for example to protect informants’ privacy). The statement is published with the article.

Where to share

We encourage authors to deposit transcriptions, questionnaires, recordings (with the consent of those recorded), word lists, corpora and code in a public repository – for example Zenodo, OSF, the Internet Archive or an institutional repository – and to cite them in the reference list.

Requests from editors

Editors and reviewers may ask to see field notes, transcriptions or data during review. If concerns are raised after publication, authors are expected to provide them to the editors.

Personal data and community knowledge

Personal data and recordings are shared only with consent, and anonymised where needed. Knowledge that a community regards as restricted is shared only with its agreement.

At a glance

Editions Cite the edition and verse
Statement For fieldwork, survey and corpus studies
Sharing Encouraged, in public repositories
Personal data With consent, anonymised if needed

Related policies

Questions about our policies? Write to the editorial office at editor@tamiliyal.in.

தமிழ்

மூலங்களும் தரவுப் பகிர்வும்

வெளியான கட்டுரைக்கு அடிப்படையான மூலங்களையும் தரவுகளையும் வாசகர்கள் கண்டறியவும் சரிபார்க்கவும் அவற்றின் மேல் தொடர்ந்து ஆய்வு செய்யவும் இயல வேண்டும்.

மூலங்களும் பதிப்புகளும்

மேற்கோள் காட்டும் ஒவ்வொரு நூலின் பதிப்பையும் – பதிப்பாசிரியர், பதிப்பகம், ஆண்டு – பாடல், நூற்பா அல்லது பக்க எண்ணுடன் சுட்டுங்கள்; அப்போதுதான் வாசகர் அப்பகுதியைக் கண்டடைய இயலும். பதிப்புகளுக்கோ சுவடிகளுக்கோ இடையே பாடவேறுபாடு இருந்தால், நீங்கள் பின்பற்றும் பாடத்தைக் குறிப்பிடுங்கள்.

தரவு கிடைக்கும் அறிக்கை

களஆய்வு, நேர்காணல், கருத்துக்கணிப்பு, பதிவுகள், உரைத் தொகுப்புகள் (corpus) அல்லது கணினிப் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளில், அத்தரவுகள் எங்கே கிடைக்கும், அல்லது அவற்றை ஏன் பகிர இயலாது (எ.கா. தகவலாளர்களின் தனியுரிமையைக் காக்க) என்பதைக் கூறும் சிறு அறிக்கை இடம்பெற வேண்டும். இவ்வறிக்கை கட்டுரையுடன் வெளியிடப்படும்.

எங்கே பகிர்வது

எழுத்துப்படிகள், வினாப்பட்டியல்கள், பதிவுகள் (பதிவு செய்யப்பட்டோரின் இசைவுடன்), சொற்பட்டியல்கள், உரைத் தொகுப்புகள், நிரல்கள் ஆகியவற்றை Zenodo, OSF, இணையக் காப்பகம் (Internet Archive) அல்லது நிறுவனக் களஞ்சியம் போன்ற பொதுக் களஞ்சியத்தில் வைத்து, மேற்கோள் பட்டியலில் சுட்டுமாறு ஆசிரியர்களை ஊக்குவிக்கிறோம்.

இதழாசிரியர் கோரிக்கைகள்

மதிப்பாய்வின்போது களக்குறிப்புகள், எழுத்துப்படிகள் அல்லது தரவுகளைப் பார்க்க இதழாசிரியர்களும் மதிப்பாய்வாளர்களும் கேட்கலாம். வெளியீட்டுக்குப் பின் ஐயங்கள் எழுந்தால், ஆசிரியர்கள் அவற்றை இதழாசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

தனிநபர் தரவும் சமூக அறிவும்

தனிநபர் தரவுகளும் பதிவுகளும் இசைவுடன் மட்டுமே, தேவையான இடங்களில் அடையாளம் நீக்கப்பட்டுப் பகிரப்படும். ஒரு சமூகம் கட்டுப்பாட்டுக்கு உரியதாகக் கருதும் அறிவு அதன் இணக்கத்துடன் மட்டுமே பகிரப்படும்.

ஒரு பார்வையில்

பதிப்புகள் பதிப்பையும் பாடல் எண்ணையும் சுட்ட வேண்டும்
அறிக்கை களஆய்வு, கருத்துக்கணிப்பு, உரைத்தொகுப்பு ஆய்வுகளுக்கு
பகிர்வு பொதுக் களஞ்சியங்களில் பகிர ஊக்கம்
தனிநபர் தரவு இசைவுடன், தேவைப்பட்டால் அடையாளம் நீக்கி

தொடர்புடைய நெறிமுறைகள்

எங்கள் நெறிமுறைகள் பற்றிய கேள்விகளா? ஆசிரியர் அலுவலகத்துக்கு editor@tamiliyal.in என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

Publish with TAMILIYAL – International Research Journal of Tamil Studies

Peer reviewed, open access, every article on its own page.