Skip to content

Policies · கொள்கைகள்

AI Policy

செயற்கை நுண்ணறிவுக் கொள்கை

Authorship is earned through substantial contribution and brings responsibility for the work.

English

Who is an author

Everyone listed as an author should have (1) made a substantial contribution to the conception or design of the work, or to the collection, analysis or interpretation of data or sources; (2) drafted or critically revised the manuscript; (3) approved the final version; and (4) agreed to be accountable for the work. People who contributed in other ways – technical help, translation, language editing, supervision without authorship, or general support – are thanked in the acknowledgements.

Gift, guest and ghost authorship are not accepted.

Contributor statement

Research articles include an author contributions statement in the declarations, preferably using the CRediT taxonomy (for example conceptualisation, methodology, investigation, writing – original draft, writing – review and editing, supervision).

Corresponding author

The corresponding author communicates with the journal for all authors, makes sure all authors approve the submission and any changes, signs the licence agreement and handles questions after publication. An ORCID iD is required for the corresponding author and recommended for all authors.

Changes to authorship

Authors should be decided before submission. Adding, removing or reordering authors after submission needs a written request with the reason, signed by all authors (including anyone being removed), and the editor’s approval. After publication, authorship changes are made only through a correction.

Generative AI

At a glance

Criteria Contribution, drafting, approval, accountability
Contributions CRediT statement
ORCID Required for corresponding author
AI Not an author; disclose all use

Related policies

Questions about our policies? Write to the editorial office at editor@tamiliyal.in.

தமிழ்

செயற்கை நுண்ணறிவுக் கொள்கை

கணிசமான பங்களிப்பால் மட்டுமே ஆசிரியர் தகுதி கிடைக்கிறது; அதனுடன் படைப்புக்கான பொறுப்பும் வருகிறது.

ஆசிரியர் யார்

ஆசிரியராகக் குறிப்பிடப்படும் ஒவ்வொருவரும் (1) ஆய்வின் கருத்தாக்கம் அல்லது வடிவமைப்பில், அல்லது தரவுகள், மூலங்களைத் திரட்டுதல், பகுப்பாய்தல், விளக்குதல் ஆகியவற்றில் கணிசமான பங்களிப்பு செய்திருக்க வேண்டும்; (2) கட்டுரையை வரைந்திருக்க வேண்டும் அல்லது திறனாய்ந்து திருத்தியிருக்க வேண்டும்; (3) இறுதி வடிவத்துக்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்; (4) படைப்புக்குப் பொறுப்பேற்க ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவி, மொழிபெயர்ப்பு, மொழித் திருத்தம், ஆசிரியர் தகுதியற்ற மேற்பார்வை, பொது உதவி போன்ற பிற வழிகளில் உதவியோருக்கு நன்றியுரையில் நன்றி தெரிவிக்கப்படும்.

அன்பளிப்பு, விருந்தினர், மறைமுக (ghost) ஆசிரியர் தகுதிகள் ஏற்கப்படுவதில்லை.

பங்களிப்பு அறிக்கை

ஆய்வுக் கட்டுரைகளின் அறிவிப்புப் பகுதியில், இயன்றவரை CRediT வகைப்பாட்டைப் பயன்படுத்தி, ஆசிரியர் பங்களிப்பு அறிக்கை இடம்பெற வேண்டும் (எ.கா. கருத்தாக்கம், ஆய்வுமுறை, ஆய்வு மேற்கொள்ளல், முதல் வரைவு எழுதுதல், மதிப்பாய்வும் திருத்தமும், மேற்பார்வை).

தொடர்பு ஆசிரியர்

தொடர்பு ஆசிரியர் அனைத்து ஆசிரியர்களின் சார்பாக இதழுடன் தொடர்புகொள்வார்; சமர்ப்பிப்பையும் மாற்றங்களையும் அனைத்து ஆசிரியர்களும் ஏற்பதை உறுதி செய்வார்; உரிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்; வெளியீட்டுக்குப் பின் எழும் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். தொடர்பு ஆசிரியருக்கு ORCID அடையாள எண் கட்டாயம்; அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆசிரியர் பட்டியலில் மாற்றம்

ஆசிரியர் பட்டியல் சமர்ப்பிப்புக்கு முன்பே முடிவு செய்யப்பட வேண்டும். சமர்ப்பித்த பின் ஆசிரியரைச் சேர்க்க, நீக்க அல்லது வரிசையை மாற்ற, அனைத்து ஆசிரியர்களும் (நீக்கப்படுபவர் உட்பட) கையொப்பமிட்ட, காரணத்துடன் கூடிய எழுத்துப்பூர்வக் கோரிக்கையும் இதழாசிரியரின் ஒப்புதலும் தேவை. வெளியீட்டுக்குப் பின், திருத்த அறிவிப்பின் மூலம் மட்டுமே மாற்றம் செய்யப்படும்.

உருவாக்கச் செயற்கை நுண்ணறிவு

ஒரு பார்வையில்

தகுதி பங்களிப்பு, வரைவு, ஒப்புதல், பொறுப்பு
பங்களிப்புகள் CRediT அறிக்கை
ORCID தொடர்பு ஆசிரியருக்குக் கட்டாயம்
செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் ஆகாது; பயன்பாட்டை அறிவிக்க வேண்டும்

தொடர்புடைய நெறிமுறைகள்

எங்கள் நெறிமுறைகள் பற்றிய கேள்விகளா? ஆசிரியர் அலுவலகத்துக்கு editor@tamiliyal.in என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

Publish with TAMILIYAL – International Research Journal of Tamil Studies

Peer reviewed, open access, every article on its own page.