Aims and Scope
Aim
TAMILIYAL aims to advance scholarly research in Tamil studies by providing a credible, accessible and ethically responsible platform for original research and critical scholarship.
Scope
The journal welcomes scholarly research in, but not limited to:
- Tamil language and linguistics
- Classical Tamil
- Sangam literature
- Medieval Tamil literature
- Modern Tamil literature
- Literary criticism
- Comparative literature
- Translation studies
- Folklore
- Tamil culture
- Tamil history
- Archaeology
- Epigraphy
- Manuscript studies
- Performing arts
- Music
- Theatre
- Religion and philosophy
- Sociology and anthropology
- Gender and society
- Education
- Tamil pedagogy
- Tamil computing
- Digital humanities
- Artificial intelligence and Tamil
- Diaspora studies
- Cultural studies
- Interdisciplinary Tamil studies
Interdisciplinary manuscripts are welcome when Tamil studies constitutes a substantive component of the research.
Originality
Submissions must constitute original scholarly work. Manuscripts that have been published previously, are simultaneously under consideration elsewhere, or contain substantial unacknowledged duplication are not acceptable.
Scholarly Quality
Submissions should demonstrate:
- A clearly defined research problem
- Appropriate methodology
- Engagement with relevant scholarship
- Evidence-based analysis
- Accurate citation
- Original scholarly contribution
- Appropriate conclusions
நோக்கமும் ஆய்வுக் களமும்
நோக்கம்
தமிழ் ஆய்வுத் துறையில் அசல் ஆய்வுகள் மற்றும் அறிவார்ந்த திறனாய்வுகளை வெளியிடுவதற்கான நம்பகமான, எளிதில் அணுகக்கூடிய, அறநெறி சார்ந்த அறிவியல் தளத்தை உருவாக்கி, தமிழ் ஆய்வின் வளர்ச்சியை முன்னெடுப்பதே தமிழியலின் நோக்கமாகும்.
ஆய்வுக் களம்
பின்வரும் துறைகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் ஆய்வுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆய்வுகள் வரவேற்கப்படுகின்றன:
- தமிழ் மொழி மற்றும் மொழியியல்
- செம்மொழித் தமிழ்
- சங்க இலக்கியம்
- இடைக்காலத் தமிழ் இலக்கியம்
- நவீனத் தமிழ் இலக்கியம்
- இலக்கியத் திறனாய்வு
- ஒப்பிலக்கியம்
- மொழிபெயர்ப்பியல்
- நாட்டுப்புறவியல்
- தமிழ் பண்பாடு
- தமிழ் வரலாறு
- தொல்லியல்
- கல்வெட்டியல்
- சுவடிப்பதிப்பியல்
- நிகழ்த்துக் கலைகள்
- இசை
- நாடகம்
- சமயம் மற்றும் தத்துவம்
- சமூகவியல் மற்றும் மானிடவியல்
- பாலினம் மற்றும் சமூகம்
- கல்வியியல்
- தமிழ் கற்பித்தல்
- தமிழ்க் கணினியியல்
- மின்னணு மனிதநேயம்
- செயற்கை நுண்ணறிவும் தமிழும்
- புலம்பெயர் தமிழியல்
- பண்பாட்டு ஆய்வுகள்
- பல்துறைத் தமிழ் ஆய்வுகள்
தமிழ் ஆய்வு இன்றியமையாத கூறாக அமையும் பல்துறை ஆய்வுகளும் வரவேற்கப்படுகின்றன.
அசல் தன்மை
சமர்ப்பிக்கப்படும் ஆய்வுகள் அசல் அறிவியல் பங்களிப்புகளாக இருக்க வேண்டும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட கட்டுரைகள், வேறு இதழில் ஒரே நேரத்தில் பரிசீலனையில் உள்ள கட்டுரைகள் அல்லது உரிய மேற்கோள் இல்லாமல் மீண்டும் பயன்படுத்தப்பட்ட உள்ளடக்கம் ஏற்றுக்கொள்ளப்படாது.
அறிவியல் தரம்
ஆய்வுக் கட்டுரை பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்:
- தெளிவான ஆய்வுச் சிக்கல்
- பொருத்தமான ஆய்வு முறை
- தொடர்புடைய முந்தைய ஆய்வுகளுடன் உரையாடல்
- சான்றுகளின் அடிப்படையிலான பகுப்பாய்வு
- துல்லியமான மேற்கோள்கள்
- புதிய அறிவியல் பங்களிப்பு
- ஆய்வின் அடிப்படையில் அமைந்த முடிவுகள்
